No results found

    துர்கா பூஜை குழுக்களுக்கான நிதியுதவி அதிகரிப்பு - மம்தா பானர்ஜி

    துர்கா பூஜையை முன்னிட்டு கடந்த ஆண்டு அனைத்து பூஜை குழுவினருக்கும் ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியானது. அதற்கு முந்தின ஆண்டும் இதே நடைமுறை பின்பற்றப்பட்டது. கொரோனா பெருந்தொற்றால் ஏற்படும் கூடுதல் செலவினங்களுக்காக இந்த தொகையை மம்தா பானர்ஜி ஒதுக்கீடு செய்துள்ளார். இலவச உரிமங்கள் மற்றும் 50 சதவீத மின் கட்டணத்தில் தள்ளுபடி உள்ளிட்டவையும் கடந்த ஆண்டு சலுகைகளாக அறிவிக்கப்பட்டன. இந்நிலையில், மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: துர்கா பூஜை பண்டிகையை முன்னிட்டு செப்டம்பர் 30-ம் தேதி முதல் அக்டோபர் 10-ம் தேதி வரை அரசு விடுமுறை நாட்களாக இருக்கும். 3-வது ஆண்டாக நிதியுதவி அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி, இந்த ஆண்டு அனைத்து துர்கா பூஜை குழுக்களும் ரூ.60 ஆயிரம் நிதி உதவி பெறுவார்கள் என அறிவித்துள்ளார்.

    Previous Next

    نموذج الاتصال