No results found

    ஓணம் பண்டிகை - செப்டம்பர் 8ம் தேதி சென்னை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

    ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னை மாவட்டத்திற்கு வரும் 8-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் அமிர்த ஜோதி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஓணம் பண்டிகையை முன்னிட்டு 08.09.2022 அன்று (வியாழக்கிழமை) சென்னை மாவட்டத்திற்கு அரசு ஆணைப்படி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. மேற்படி உள்ளூர் விடுமுறைக்கு பதில் 17.09.2022 சனிக்கிழமை அன்று சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு பணி நாளாக அறிவிக்கப்படுகின்றது. ஆயினும் உள்ளூர் விடுமுறை நாளான 08.09.2022 அன்று அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலகங்கள் குறிப்பிட்ட பணியாளர்களைக் கொண்டு பொது மக்களுக்கு சிரமம் ஏற்படாதவாறு செயல்படும் என தெரிவித்துள்ளார்.

    Previous Next

    نموذج الاتصال