No results found

    பாகிஸ்தானுக்கு 1.1 பில்லியன் டாலர் நிதியுதவி அளிக்க ஐ.எம்.எப். ஒப்புதல்

    இலங்கையை அடுத்து தற்போது பாகிஸ்தான் நாடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. தொழிற்சாலைகளில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால், ஏராளமானோருக்கு வேலையிழப்புகள் ஏற்பட்டுள்ளன. பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்கும் விதமாக அந்நாட்டின் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சர்வதேச நாணய நிதியத்திடம் அந்நாடு நிதியுதவி கோரியுள்ளது. இந்நிலையில், பாகிஸ்தானுக்கு கடன் வழங்குவது தொடர்பாக சர்வதேச நாணய நிதியம் இன்று ஆலோசனை நடத்தியது. பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் பாகிஸ்தானுக்கு 1.17 பில்லியன் டாலர்களை வழங்க சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழ் 7 மற்றும் 8வது தவணையாக பாகிஸ்தான் 1.1 பில்லியன் டாலர்களைப் பெற்றுக் கொள்ளும் என தெரிகிறது.

    Previous Next

    نموذج الاتصال