No results found

    தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் மாமல்லபுரத்தில் நடக்கிறது


    நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சி தொடங்கி கடந்த 2-ந்தேதியுடன் முதல் ஆண்டு முடிவடைந்து 2-ம் ஆண்டு தொடங்கியுள்ளது. கட்சியின் உள் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக தமிழகம் முழுவதும் மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளை விஜய் நியமனம் செய்து வருகிறார்.

    இதுவரை 5 கட்டங்களாக மாவட்ட செயலாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அடுத்ததாக தேர்தலில் வெற்றி பெறுவதற்காக வியூகம் அமைப்பது தொடர்பான பணிகளில் விஜய் ஈடுபட்டுள்ளார்.

    இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் மாமல்லபுரம் அருகே உள்ள பூஞ்சேரி தனியார் விடுதியில் விரைவில் நடைபெற இருக்கிறது.

    இதைத்தொடர்ந்து பொதுக்குழு நடைபெறும் இடம், வாகன நிறுத்தும் இடங்கள், பங்கேற்கும் உறுப்பினர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப தேர்வு செய்யப்பட்ட அரங்குகளை கட்சி பொதுச் செயலாளர் புஸ்சி என்.ஆனந்த், தேர்தல் பிரிவு மேலாண்மை குழு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.

    தமிழகம் முழுவதும் உள்ள கட்சி நிர்வாகிகள் வந்து செல்லும் வண்ணம் அடிப்படை வசதி மற்றும் பாதுகாப்பு வசதிகளுடன் பொதுக்குழு கூட்ட ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    Previous Next

    نموذج الاتصال