
தாரமர் கொன்றையும் செண்பகமாலையும் சாத்தும் தில்லை
ஊரர் தம்பாகத்து உமை மைந்தனே உலகு ஏழும் பெற்ற
சீர் அபிராமி அந்தாதி எப்போதும் என் சிந்தை உள்ளே
காரமர் மேனி கணபதியே நிற்கக் கட்டுரையே
பொருள்:
கொன்றை, செண்பகம் முதிலிய மலர்களால் தொடுக்கப்பட்ட மாலையினை அணியும் தில்லை ஊரர் (நடராஜர்) அவரின் ஒரு பாகமான உமையின் மைந்தனே, கணபதியே, சிறந்ததான இந்த அபிராமி அந்தாதி எப்போதும் என் நினைவில் இருக்க வேண்டும். அன்னை அபிராமி ஏழுலகையும் பெற்றவள். கணபதியை, அபிராமி பட்டர், கரிய மேகங்களை போல் அழகுடையவர் என்றும் இதில் கூறியுள்ளார்.
பாடல் கேட்க (ராகம் - சௌராஷ்ட்ரம் , தாளம் - ஆதி)