No results found

    அபிராமி அந்தாதி பாடல் - 96


    பலன்: சகல கலைகளிலும் தேர்ச்சி பெறுவோம்

    கோமள வல்லியை, அல்லியந்தாமரைக் கோயில் வைகும்
    யாமள வல்லியை, ஏதம் இல்லாளை, எழுதரிய
    சாமள மேனிச் சகலகலா மயில் தன்னை, தம்மால்
    ஆமளவும் தொழுவார், எழு பாருக்கும் ஆதிபரே

    பொருள்:

    1. கோமள வல்லி - அழகிய பெண்
    2. அல்லியந்தாமரைக் கோயில் வைகும் யாமள வல்லியை - அழகிய மென்மையான தாமரையினை இருப்பிடமாகக் கொண்டு உறையும் யாமள (இளமை ததும்பும்)வல்லி. தாமரை - கமலம். கோயில் - ஆலயம். கமலாலயம் - தாமரைக்கோயில். திருவாரூர் க்ஷேத்ரத்தில், தாமரையினை கோயிலாக அன்னை  அபிராமி,கமலாம்பாளாக அருள் புரிகிறாள்.
    3. ஏதம் இல்லாள் - குற்றமற்றவள்
    4. எழுதரிய சாமள மேனி - எழுத்தால் வர்ணிக்க முடியாத அழகிய கருநிற மேனி உடையவள். (ஷ்யாமே, ஷ்யாமளே என்று பெரியோர்கள் அம்பாளை அழைப்பார்கள்)
    5. சகல கலா மயில் - அனைத்துக் கலைகளிலும் தேர்ந்தவள், மயில் போன்ற அழகு நிறைந்தவள்

    இத்தகு பெருமை வாய்ந்த அன்னையை, தம்மால் முடிந்த அளவிற்கு வணங்குபவர்கள், நிச்சியம் ஏழு உலகிற்கும் அதிபர்கள் ஆவார்கள்.

    பாடல் (ராகம்: பிருந்தாவன சாரங்கா, தாளம் - --விருத்தம் --) கேட்க

    Previous Next

    نموذج الاتصال