No results found

    அபிராமி அந்தாதி பாடல் - 85


    பலன்: நல்வழி கிடைக்கும்

    பார்க்கும் திசைதொறும் பாசாங்குசமும், பனிச் சிறை வண்டு
    ஆர்க்கும் புதுமலர் ஐந்தும், கரும்பும், என் அல்லல் எல்லாம்
    தீர்க்கும் திரிபுரையாள் திருமேனியும், சிற்றிடையும்,
    வாரக் குங்கும முலையும்,  முலைமேல் முத்து மாலையுமே

    பொருள்:

    நான் பார்க்கும் திசைகளில் எல்லாம், என் அல்லல் தீர்க்கும் திரிபுரையான, அபிராமியின் கையில் இருக்கும் பாசம், அங்குசம், கரும்பு வில், வண்டுகளை கவர்ந்து, தன்னுள் சிறைபிடித்து வைத்திருக்கும், என்றும் புதியதாய் இருக்கும் 5 மலர்கள், மற்றும் அவள் திருமேனி, சிறிய இடை, குங்குமம் பூசப்பட்ட மார்பகங்கள், அந்த திரு மார்பில் தவழும் முத்துமாலை ஆகியவற்றையே காண்கிறேன்.

    பாடல் (ராகம் - ஹுசேனி, தாளம் - ஆதி, திஸ்ர நடை) கேட்க

    Previous Next

    نموذج الاتصال