No results found

    தஞ்சை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு இந்திய கம்யூனிஸ்ட் போராட்டம்


    உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி ஜுன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை கர்நாடகா அரசு உடனடியாக வழங்க வேண்டும். தண்ணீர் இன்றி கருகி பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ. 35 ஆயிரம் இழப்பீடாக வழங்க வேண்டும். குறுவை சாகுபடிக்கான பயிர் காப்பீடு திட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பலவேறு கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வலியுறுத்தி தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது.

    மாவட்ட செயலாளர் முத்து உத்திராபதி தலைமை வகித்தார். இதில் மாவட்ட நிர்வாகிகள் சேவையா ,விஜயலட்சுமி, பிரபாகர் , முத்துக்குமார், செல்வகுமார் ,கல்யாணி, விஜயலட்சுமி, ராமச்சந்திரன், முகில், ராமலிங்கம் ,மூத்த தலைவர் கிருஷ்ணன், ஏ.ஐ.டி.யூ.சி மாவட்ட செயலாளர் துரை.மதிவாணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு கர்நாடகா அரசு, மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

    அப்போது அவர்கள் தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதையடுத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 50 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இதேப்போல் அம்மாபேட்டை தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற முற்றுகை போராட்டத்திற்கு மாவட்ட துணை செயலாளர் ஆர்.செந்தில்குமார் தலைமை தாங்கினார்.

    இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு காவிரி நீரை வழங்கக்கோரி கோஷங்கள் எழுப்பினர். இதேப்போல் மாவட்டத்தில் மொத்தம் 9 இடங்களில் முற்றுகை போராட்டம் நடந்தது.

    போராட்டத்தில் ஈடுபட்டவ ர்களை அந்தந்த போலீசார் கைது செய்தனர்.

    Previous Next

    نموذج الاتصال