ஜெனீவா ஒப்பந்த தினத்தையொட்டி நாமக்கல்லில் ஜூனியர் ரெட் கிராஸ் சார்பில் ஜெனிவா ஒப்பந்த தினவிழா பேரணி நடைபெற்றது. நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட கல்வி அலுவலர்கள் ரவிச்சந்திரன், தனியார் பள்ளி மாவட்ட கல்வி அலுவலர் கணேசன், கண்காணிப்பாளர் விவேக், தொடக்க பள்ளி மாவட்ட கல்வி அலுவலர் பாலசுப்ரணியம் ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.
வட்டார போக்குவரத்து அலுவலர்கள் முருகன், முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இப்பேரணியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இப்பேரணி நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் தொடங்கி டாக்டர் சங்கரன் சாலை, திருச்சி சாலை, மணிக்கூண்டு, மோகனூர் சாலை வழியாக மீண்டும் பள்ளியை வந்தடைந்தன.
இப்பேரணியில் ரெட் கிராஸ் செயலாளர் ராஜேஷ்கண்ணன், மாவட்ட அமைப்பாளர் சர்தார பாஷா, இணை அமைப்பாளர் சதீஸ்குமார், மற்றும் மாவட்டத்தில் பள்ளியில் உள்ள ஜுனியர் ரெட்கிராஸ் மாணவர்கள் கலந்து கொண்டனர்.