No results found

    தென்காசியில் தே.மு.தி.க. கண்டன ஆர்ப்பாட்டம்


    தி.மு.க. அரசை கண்டித்தும், அனைத்து பெண்களுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்காசி தெற்கு, வடக்கு மாவட்ட தே.மு.தி.க. சார்பில் தென்காசியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    தென்காசி தெற்கு மாவட்ட தே.மு.தி.க. செயலாளர் பழனிசங்கர், வடக்கு மாவட்ட செயலாளர் சோலை கனகராஜ் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில தேர்தல் பணி செயலாளர் தங்கமணி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

    தெற்கு மாவட்ட அவை தலைவர் சுரண்டை சங்கரலிங்கம், வடக்கு மாவட்ட அவை தலைவர் கடையநல்லூர் சரவணன், பொருளாளர்கள் வக்கீல் சந்துரு சுப்பிரமணியன் (தெற்கு), ராமர் (வடக்கு) ஆகியோர் முன்னிலை வகித்தனர். தெற்கு மாவட்ட நகர செயலாளர் பேச்சி வரவேற்று பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய செயலாளர்கள், அவைத் தலைவர்கள், பொருளாளர்கள், நிர்வாகிகள், நகர செயலாளர், பொருளாளர்கள், நிர்வாகிகள், பேரூர் நிர்வாகிகள் மற்றும் பிற அணி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட சுமார் 500 பேர் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர். முடிவில் தென்காசி தெற்கு மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் சுடலைமணி நன்றி கூறினார்.

    Previous Next

    نموذج الاتصال