No results found

    ரூ.12.24 கோடி செலவில் மாணவ-மாணவியர் தங்கும் விடுதிகள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்


    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் பிற்படுத்தப்பட்டோர் மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 12 கோடியே 24 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர் நலக் கல்லூரி மாணவ, மாணவியருக்கான 5 விடுதிக் கட்டிடங்களை திறந்து வைத்தார்.

    அந்த வகையில் ஓசூர், கடலூர், கோவில்பட்டி, தஞ்சாவூர், மேலூர் ஆகிய 5 இடங்களில் தலா 100 மாணவிகள் தங்கும் வகையில் கட்டப்பட்ட விடுதி கட்டிடங்கள் இன்று திறக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    Previous Next

    نموذج الاتصال