திருவாரூர் மாவட்ட காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மனிதசங்கிலி பேரணி திருத்துறைப்பூண்டியில் நடைபெற்றது. பேரணியை துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம் தொடங்கி வைத்தார்.
பேரணியானது பழைய பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக புதிய பஸ் நிலையம் வந்தடைந்தது. போதை பொருட்களுக்கு எதிராக மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.பின், அனைவரும் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
நிகழ்வில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கழனியப்பன், சப்-இன்ஸ்பெக்டர்கள் முத்துகுமார், முருகவேல், மனோகரன், போலீசார் மற்றும் கொறுக்கை தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள், கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.