No results found

    பா.ஜ.க.வினர் திடீர் ஆர்ப்பாட்டம்


    ராணிப்பேட்டை பாரதிநகரில் உள்ள பா.ஜ.க அலுவலகம் முன்பு, கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் நிலையில் பெங்களூரில் நடைபெறும் எதிர்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க சென்ற தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை 'கோ பேக்' ஸ்டாலின் என்ற பெயரில் பா.ஜ.க வினர் கருப்பு உடை அணிந்து திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு பா.ஜ.க மாவட்ட தலைவர் விஜயன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் வெங்கடேசன் கலந்து கொண்டு , தமிழ்நாட்டு மக்களின் குடிநீர் தேவையை பாதிக்கும் வகையில் மேகதாதுவில் அணைக்கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசையும், இதை பொருட்படுத்தாமல் எதிர்கட்சிகள் கூட்டத்திற்கு சென்றுள்ள தமிழ்நாடு முதல் அமைச்சரையும் கண்டித்து பேசினார்.

    Previous Next

    نموذج الاتصال