No results found

    மாநில ஹாக்கி போட்டி


    சிவகங்கை மாவட்டத்தில் அரசு பள்ளி மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் படித்து வரும் 18 மாணவிகள் மாநில அளவிலான முதல்-அமைச்சர் கோப்பைக்கான ஹாக்கி போட்டியில் தங்கம் வென்றனர். இதனைத்தொடர்ந்து செந்தில்நாதன் எம்.எல்.ஏ. அந்த மாணவிகளுக்கு சால்வை அணிவித்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜா, ஒன்றிய கவுன்சிலர் ராமசாமி, தேவ ராஜ், மாவட்ட கலைப்பிரிவு செயலாளர் செந்தில் முருகன், ஒன்றிய செயலா ளர் செல்வமணி, தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் கோபி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் இளங்கோவன், கூட்டுறவு வங்கி தலைவர் தேவதாஸ் உள்பட பலர் கலந்து ெகாண்டனர்.

    Previous Next

    نموذج الاتصال