No results found

    சட்டசபை நிகழ்வுகளை நேரலை செய்ய இயலாது - உயர்நீதிமன்றத்தில் சட்டசபை செயலாளர் பதில்


    சட்டசபை நிகழ்வுகளை நேரலை செய்யக்கோரி 2012 மற்றும் 2015-ம் ஆண்டுகளில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் சட்டசபை செயலாளர் சீனிவாசன் விளக்கம் அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது: சட்டசபை நிகழ்வுகளை தற்போது நேரலை செய்ய இயலாது என தூர்தர்ஷன் தெரிவித்துள்ளது. சபாநாயகரின் ஒப்புதலுடன் ஆளுநர் உரை, நிதிநிலை அறிக்கை உரை உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் தூர்தர்ஷன், ஆல் இந்தியா ரோடியோ மூலமாக நேரடி ஒளிபரப்பு பட்ஜெட், மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்களுக்கு பதிலளிப்பது, 110 விதியின் கீழ் அறிவிப்புகள் முழுமையாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. சமூக வலைதளம் மூலமாகவும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அனைத்து அம்சங்களையும் பரிசீலித்து சபை நிகழ்வுகளை படிப்படியாக நேரடி ஒளிபரப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    Previous Next

    نموذج الاتصال