No results found

    பம்மல் மண்டல அலுவலகம் முன்பு கருணாநிதி முழு உருவ வெண்கல சிலை- மாநகராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம்


    தாம்பரம் மாநகராட்சி பம்மல் மண்டலக்குழு கூட்டம் மண்டலத் தலைவர் வே.கருணாநிதி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- முன்னாள் முதலமைச்சரும் முத்தமிழ் அறிஞருமான டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுவதையொட்டி திராவிட இயக்க சிந்தனைகளை திரைப்பட வசனங்கள் மூலம் இளைஞர்கள் மத்தியில் விதைத்து சமுதாயத்தில் புரட்சியை ஏற்படுத்தியவர், தமிழ் மொழிக்கு செம்மொழி அங்கீகாரம் பெற்று தந்தவர், மாநில உரிமைகளுக்காக போராடிய மாபெரும் தலைவர், நவீன தமிழகத்தை மட்டுமல்ல நவீன இந்தியாவையும் உருவாக்கியவர் என புகழப்படும் கருணாநிதியை போற்றும் வகையில் மண்டலம் 1-ல் பம்மல் அலுவலகத்தில் முன்பு நுழைவு வாயலில் முழு அளவு கலைஞரின் வெண்கல சிலை அமைக்க ஏகமனதாக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்றி அரசுக்கு மேயர் அனுப்பி வைக்க இக்கூட்டம் முடிவு செய்கிறது. உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளுக்கு மாதந்தோறும் மதிப்பூதியம் வழங்க ஆணையிட்ட முதலமைச்சருக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    Previous Next

    نموذج الاتصال