No results found

    தருமபுரி ஏல அங்காடியில் ரூ.5 லட்சத்திற்கு பட்டுக்கூடுகள் விற்பனை


    தருமபுரியில் பட்டு வளர்ச்சித்துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள். இந்த அங்காடிக்கு நேற்று முன் தினம் 751 கிலோவாக இருந்த பட்டுக்கூடுகள் வரத்து நேற்று 1,176 கிலோவாக அதிகரித்தது. அதே நேரத்தில் 1 கிலோ ரூ.525-க்கு விற்பனையான பட்டுக்கூடு நேற்று கிலோவிற்கு ரூ.24 விலை குறைந்தது. நேற்று ஒரு கிலோ அதிகபட்சமாக ரூ.501-க்கும், குறைந்தபட்சமாக ரூ.224-க்கும், சராசரியாக ரூ.420.27-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.4 லட்சத்து 94 ஆயிரத்துக்கு பட்டுக்கூடுகள் விற்பனையானது.

    Previous Next

    نموذج الاتصال