No results found

    ஆஸ்திரேலியா அணிதான் கூடுதல் பலத்துடன் உள்ளது என்கிறார் ரவி சாஸ்திரி


    இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நாளை லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்குகிறது. இரண்டு அணிகளின் பலம் பலவீனம் குறித்து கிரிக்கெட் விமர்சகர்கள் ஆராயத் தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரி இந்தியாவை விட சில இடங்களில் ஆஸ்திரேலியா கூடுதல் பலத்துடன் திகழ்கிறது எனத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:- வேகப்பந்து வீச்சை பொறுத்தவரையில், இந்திய அணியில் பும்ரா இருந்திருந்தால் முகமது சமி, முகமது சிராஜ் உடன் ஆஸ்திரேலியாவுக்கு சமமானது என நான் சொல்லியிருப்பேன். ஆனால், ஸ்டார்க், கம்மின்ஸ் ஆகியோரின் தலைசிறந்த தாக்குதலுடன் பிட்னஸ் முக்கிய பங்காற்றும்.

    பிட்னஸ் இந்த போட்டியில் முக்கிய பங்காற்றும் என்பதில் சந்தேகமில்லை. தினந்தோறும் வலைப்பயிற்சியில் இரண்டு அல்லது மூன்று பணி நேரம் பயிற்சி மேற்கொள்வதை விட, ஆடுகளத்தில் ஆறு மணிநேரம் நின்று விளையாட, வீரர்கள் அதற்கு ஏற்ப போட்டியில் விளையாடியிருக்க வேண்டியது அவசியம். இரண்டு மாத டி20 தொடர் சற்று மாற்றத்தை ஏற்படுத்தலாம். இந்திய அணி சிறந்த முறையில் தயாராகியிருந்தாலும் ஓவல் ஆடுகளம் ஆஸ்திரேலியாவுக்கு சற்று கூடுதல் சாதகமாக இருக்கும். முதல் ஒரு மணி நேர ஆட்டத்தில் முகமது சமி எதிரணியை மிரட்டலாம். அவரது சிறந்த லைன் மற்றும் லெந்த் பந்து வீச்சால் ஒரு வீரரை நிலைத்து நின்று விளையாட அனுமதிக்கமாட்டார் இவ்வா ரவி சாஸ்திரி தெரிவித்தார்.

    Previous Next

    نموذج الاتصال