No results found

    நெதர்லாந்தில் இந்திய உணவகம் திறப்பு - சுரேஷ் ரெய்னாவுக்கு ரசிகர்கள் வாழ்த்து


    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா, ஐபிஎல் உள்பட அனைத்து வகையான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பை வென்ற 4 சீசன்களிலும் இவரது பங்களிப்பு மிகப்பெரியது. இந்நிலையில், சுரேஷ் ரெய்னா நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமில் 'ரெய்னா இந்திய உணவகம்' என்ற பெயரில் இந்திய உணவகம் ஒன்றை நிறுவியுள்ளார். ஆம்ஸ்டர்டாம் நகரில் புதிய உணவகம் ஒன்றை தொடங்கியுதை சுரேஷ் ரெய்னா சமூக வலைதளத்தில் பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இவரது புதிய முயற்சிக்கு ரசிகர்கள் உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    Previous Next

    نموذج الاتصال