No results found

    புதுவை சட்டசபை வளாகம் 18 மாதங்களில் கட்டப்படும்


    புதுவை மாநிலத்தின் புதிய சட்டசபை வளாகம் தட்டாஞ்சாவடியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளா கத்தில் கட்டப்பட உள்ளது. மத்திய அரசின் நிதி ரூ.440 கோடியில் தலைமை செயலகத்துடன் இணைந்த புதுவை சட்டசபை வளாகம் அமைய உள்ளது. இதற்காக கட்டிட வடிவமைப்பை டெல்லியை சேர்ந்த நிறுவனம் தயாரித்து வருகிறது. ஏற்கனவே 2 முறை கட்டிடத்தின் வெளித் தோற்றம், உள்தோற்ற வரைபடத்தை நிறுவனத்தின் அதிகாரிகள் புதுவைக்கு வந்து முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களிடம் விளக்கினர். இதில் சில மாற்றங்களை செய்ய முதல்-அமைச்சர் ரங்கசாமி உத்தர விட்டிருந்தார்.

    இந்நிலையில் நேற்றைய தினம் மீண்டும் வரைபடத்தை 3டி படக்காட்சியின் மூலம் விளக்கினர். அப்போதும் சில திருத்தங்களை முதல்-அமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து புதுவை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:- சட்டமன்ற வரைபடம் வருகிற 30-ந் தேதி இறுதி செய்யப்பட்டு விடும். மத்திய அரசின் அனுமதி பெறப்படும். ஜூலை 15-ந் தேதிக்குள் டெண்டர் விடும் நடவடிக்கையை எடுத்துள்ளோம். புதுவை சட்டசபை வளாகம் 18 மாதங்களில் கட்டப்படும். புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய வளாகமாக இது அமையும். தலைமை செயலகத்துடன் ஒருங்கிணைந்த சட்டமன்ற வளாகம் கட்ட மத்திய அரசு ரூ.440 கோடி வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.

    இதில் ஆயிரம் பேர் அமரும் வகையில் அரங்கம் அமைக்கப்படும். சட்டமன்ற மைய கூட்ட அரங்கில் 60 எம்.எல்.ஏ.க்கள் அமரும் வகையில் அமைக்கப்படும். தலைமை செயலகத்தையும், சட்டசபையையும் இணைக்கும் வகையில் முதல்மாடி இணைக்கப்படும். ஒட்டுமொத்தமாக 15 ஏக்கரில் சட்டசபை வளாகம் அமைக்கப்படும். சட்டசபை கட்டிடம் 6 மாடி, தலைமை செயலகம் 5 மாடி கொண்டதாக அமைக்கப் படும். ஒருங்கிணைந்த வளாகத்தில் ஹெலிபேடு தளமும் அமைக்கப்படும். புதிய சட்டசபை மின்னணு முறையில் பதிவு செய்யும் வகையில் காகிதமில்லா சட்டசபையாக அமைக்கவும் நடவடிக்கை எடுத்துள் ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

    Previous Next

    نموذج الاتصال