யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இப்படத்தில் சாந்தினி, டவுட் செந்தில், ஆரோல் சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் முதல் டிரைலர் கடந்த ஆண்டு வெளியாகி கவனம் பெற்றது. நேற்று முன்தினம் 'பொம்மை' படத்தின் இரண்டாவது டிரைலரை படக்குழு வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் பொம்மை படத்தின் இரண்டாவது டிரைலர் வெளியான ஒரு நாளில் மில்லியன் பார்வையாளர்களுக்கு மேல் கடந்துள்ளதாக எஸ்.ஜே.சூர்யா சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். இதனை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர் இப்படம் வருகிற 16-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
1M+ views in a day #Bommai trailer 2 🥰🥰🥰🥰🥰🥰 thx for the love and support 💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏. https://t.co/laXJfLZ6kN @thisisysr , @Radhamohan_Dir ,@madhankarky @thinkmusicindia and team 💐💐💐💐💐💐💐💐💐💐💐 pic.twitter.com/owXpOHrfsR
— S J Suryah (@iam_SJSuryah) June 6, 2023