No results found

    அமெரிக்க அதிபர் தேர்தல் - டிரம்பை எதிர்த்து முன்னாள் துணை அதிபர் மைக் பென்ஸ் போட்டி


    அமெரிக்காவில் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுகிறார். குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப், அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட உள்ளதாக அறிவித்து பிரசாரத்தையும் தொடங்கிவிட்டார். குடியரசு கட்சியில் தன்னை எதிர்த்து வேட்பாளர் தேர்வில் வேறு யாரும் போட்டியிடக் கூடாது என்பதில் டிரம்ப் தீவிரமாக இருந்து கட்சி நிர்வாகத்திடம் ஆதரவு திரட்டி வந்தார். இந்நிலையில், டிரம்பை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் மைக் பென்ஸ் போட்டியிட உள்ளார். இதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் டிரம்ப் அதிபராக இருந்தபோது துணை அதிபராக இருந்தார். கடந்த முறை நடந்த துணை அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸை எதிர்த்து போட்டியிட்டார்.

    Previous Next

    نموذج الاتصال