இந்த கூட்டத்தில், மைக்ரோசாப்ட் சிஇஓ சத்யா நாதெல்லா, ஆப்பிள் சிஇஓ டிம் குக், கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, ஓபன்ஏஐ சிஇஓ சாம் ஆல்ட்மேன், ஏஎம்டி சிஇஓ லிசா சு, நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட அமெரிக்க பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியின்போது, பிரதமர் மோடிக்கு அதிபர் ஜோ பைடன் சிறப்பு டி- சர்ட் ஒன்றை பரிசாக வழங்கினார். அந்த டி-சர்ட்டில் ஏஐ (AI-செயற்கை நுண்ணறிவு) பற்றிய மேற்கோள் அச்சிடப்பட்டிருந்தது.
பின்னர் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, AIக்கு புதிய வரைமுறையை வழங்கினார். அப்போது அவர், " 'எதிர்காலம் AI - அமெரிக்கா & இந்தியா'. கடந்த சில ஆண்டுகளில், AI- செயற்கை நுண்ணறிவில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அதே நேரத்தில், மற்றொரு AI- அமெரிக்கா மற்றும் இந்தியாவில் இன்னும் முக்கியமான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது" என்றார். வெள்ளை மாளிகையில் இருநாட்டு வர்த்தக பிரமுகர்களுடனான சந்திப்பின் போது பைடன் பிரதமர் மோடிக்கு சிறப்பு பரிசை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
AI is the future, be it Artificial Intelligence or America-India! Our nations are stronger together, our planet is better when we work in collaboration. pic.twitter.com/wTEPJ5mcbo
— Narendra Modi (@narendramodi) June 23, 2023