No results found

    ரூ.2,000 நோட்டு வாபஸ்: பா.ஜனதாவின் வழக்கமான பாணி- காங்கிரஸ் விமர்சனம்


    ரூ.2,000 நோட்டு வாபஸ் அறிவிப்பை காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:- 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந்தேதியன்று துக்ளக் பாணி பேரழிவு நடவடிக்கைக்கு பிறகு பெரும் ஆரவாரத்துடன் அறிமுகப்படுத்தப்பட்ட ரூ.2,000 நோட்டுகள் வாபஸ் பெறப்படுகின்றன. இது, தன்னைத்தானே 'விஸ்வகுரு' என்று சொல்லிக்கொள்பவரின் வழக்கமான பாணி. 'முதலில் செய், பிறகு யோசி' என்ற அவரது பாணியை இது காட்டுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், ''2-வது பணமதிப்பிழப்பு பேரழிவின் தொடக்கம்'' என்று வர்ணித்துள்ளார்.

    Previous Next

    نموذج الاتصال