No results found

    அந்த மாதிரி அக்கவுண்ட்களை நீக்கிடுவேன்... எலான் மஸ்க்-இன் அடுத்த அதிரடி!


    டுவிட்டரில் நீண்டகாலம் பயன்படுத்தாமல் இருக்கும் அக்கவுண்ட்களை நீக்க முடிவு செய்திருப்பதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பின் மூலம் கடந்த சில ஆண்டுகள் வரை பயன்படுத்தாமல் இருக்கும் டுவிட்டர் அக்கவுண்ட்கள் நீக்கப்படும் சூழல் உருவாகி இருக்கிறது. "கடந்த சில ஆண்டுகளாக எவ்வித நடவடிக்கையும் இல்லாத அக்கவுண்ட்களை நீக்க இருக்கிறோம். இதன் காரணமாக ஃபாலோயர்கள் எண்ணிக்கை குறைவதை கவனிக்க முடியும்," என்று எலான் மஸ்க் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். எலான் மஸ்க்-இன் புதிய அறிவிப்பின் மூலம் டுவிட்டர் தளத்தில் பயனர்களின் ஃபாலோயர்கள் எண்ணிக்கை குறையும். பயனர்கள் தங்களது அக்கவுண்ட் நீக்கப்படாமல் இருக்க ஒவ்வொரு 30 நாட்களுக்கும் ஒரு முறை பயன்படுத்த வேண்டும் என்று டுவிட்டர் கொள்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    Previous Next

    نموذج الاتصال