No results found

    காங்கிரஸ் கட்சிக்கு மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி ஆதரவு?


    சமீபத்தில் நடந்து முடிந்த கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. 36 ஆண்டுக்கு பின் அங்கு 137 இடங்களைக் கைப்பற்றி காங்கிரஸ் கட்சி பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கிறது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும், மேற்கு வங்காள முதல் மந்திரியுமான மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி வலுவாக உள்ள இடங்களில் அவர்களை மாநில கட்சிகள் ஆதரிப்பதில் தவறில்லை. அதேபோல் மாநில கட்சிகள் வலுவாக உள்ள இடங்களில் காங்கிரஸ் கட்சியும் ஆதரவு அளிக்க வேண்டும்.

    கர்நாடகாவில் திரிணாமுல் காங்கிரஸ் உங்களை ஆதரிப்பது போலவும், வங்காளத்தில் எனக்கு எதிராகப் போவது போலவும் கொள்கை செல்ல முடியாது. நீங்கள் ஏதாவது நல்லதை அடைய விரும்பினால், சில பகுதிகளில் தியாகம் செய்ய வேண்டும். திரிணாமுல் காங்கிரசின் கணக்கீட்டின்படி காங்கிரஸ் 200 இடங்களில் வலுவாக உள்ளது. எந்தப் பிராந்தியத்திலும் யார் வலுவாக இருந்தாலும் ஆதரிக்கப்பட வேண்டும். உதாரணமாக, டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி, மேற்கு வங்காளத்தில் டிஎம்சி, பீகாரில் ஜேடியு-ஆர்ஜேடி கூட்டணி மற்றும் பிறராலும் ஆதரிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    Previous Next

    نموذج الاتصال