No results found

    உச்ச நீதிமன்றத்தில் 2 புதிய நீதிபதிகள் பதவியேற்பு- முழு அளவை எட்டிய நீதிபதிகள் எண்ணிக்கை


    உச்ச நீதிமன்றத்திற்கு 2 புதிய நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஆந்திர பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பிரசாந்த் குமார் மிஸ்ரா, மூத்த வழக்கறிஞர் கே.வி.விஸ்வநாதன் ஆகியோரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்திருந்தது. இந்த பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது. இதற்கான உத்தரவு நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டது. அதன்பின்னர், புதிய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் ட்விட்டரில் அறிவித்தார். இதையடுத்து, இரண்டு புதிய நீதிபதிகளும் இன்று பதவியேற்றனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு விழா உச்ச நீதிமன்ற இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. உச்ச நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை 34. தலைமை நீதிபதி உள்பட மொத்தம் 34 நீதிபதிகள் இருந்தனர். அவர்களில் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி மற்றும் நீதிபதி எம்.ஆர்.ஷா ஆகியோர் ஓய்வு பெற்றதையடுத்து, உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 32 ஆக குறைந்திருந்தது. இன்று புதிய நீதிபதிகள் பதவியேற்றதையடுத்து மீண்டும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணக்கை முழு அளவை எட்டியது.

    Previous Next

    نموذج الاتصال