தமிழ்நாடு சிறை மீண்டோர் நலச்சங்கம் மூலமாக பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு பொது மன்னிப்பில் முன்விடுதலை செய்யப்பட்ட 660 முன்னாள் சிறைவாசிகளுக்கு, கறவை மாடுகள் வாங்குதல், தையல் தொழில், தேநீர் கடை, சலவைத் தொழில், உணவகம் அமைத்தல் போன்ற சுயதொழில்கள் தொடங்கிட ரூ.3 கோடியே 30 லட்சத்துக்கான காசோலைகளை வழங்கிடும் அடையாளமாக 10 முன்னாள் சிறைவாசிகளுக்கு சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறையின் சார்பில் சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காசோலைகளை வழங்கினார். இதன்மூலம், விடுதலை செய்யப்பட்ட 660 சிறைவாசிகள் சுயதொழில் செய்து அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, சீரிய மறுவாழ்வு பெற்று மீண்டும் குற்றச்செயலில் ஈடுபடாமல் சமூகத்தில் புதிய வாழ்க்கையைத் தொடங்கிட வழிவகுக்கும். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் ரகுபதி, பி.கே.சேகர்பாபு, உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி, போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
முன்கூட்டி விடுதலை செய்யப்பட்ட 660 பேருக்கு தொழில் தொடங்க கடன் உதவி- மு.க.ஸ்டாலின் வழங்கினார்
Tamil News