No results found

    நடிகர் சரத்பாபு உயிரிழந்து விட்டதாக பரவிய செய்தி - சகோதரி மறுப்பு


    தமிழ், தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகர் சரத்பாபு (71). வயது முதிர்வு, உடல்நலக் குறைவால் சரத்பாபு ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 20-ம் தேதி முதல் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு வென்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. சரத்பாபுவின் சிறுநீரகங்கள், கல்லீரல், நுரையீரல் பாதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, நடிகர் சரத்பாபு உயிரிழந்து விட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின. தெலுங்கு, தமிழ் ஊடகங்களிலும் இதுதொடர்பாக செய்திகள் வெளியாகின.

    இந்நிலையில், நடிகர் சரத்பாபு குணமடைந்து வருவதாகவும், அவர் உயிரிழந்துவிட்டதாக வெளியான செய்திகள் பொய்யானவை என நடிகர் சரத்பாபுவின் சகோதரி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நடிகர் சரத்பாபுவின் உதவியாளர் மற்றும் அவரது சகோதரி வெளியிட்டுள்ள தகவலில், நடிகர் சரத்பாபு மரணமடைந்து விட்டதாக சமூக வலைதளங்களில் வெளியான அனைத்து செய்திகளும் தவறானவை. சரத்பாபு குணமடைந்து வருகிறார். அவர் வேறு அறைக்கு மாற்றப்பட்டுள்ளார். சரத்பாபு முழுமையாக குணமடைந்து விரைவில் பத்திரிக்கையாளர்களிடம் பேசுவார் என்று நான் நம்புகிறேன். சமூக வலைதளங்களில் வரும் செய்திகள் எதையும் நம்பவேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

    Previous Next

    نموذج الاتصال