புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே கல்லூர் கிராமத்தில் அரியநாயகி அம்மன் மது எடுப்பு திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல், மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்ளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டது. மஞ்சுவிரட்டில் களைகள் அவிழ்த்துவிடப்பட்டது. இதில் சீறிப்பாய்ந்த காளைகள் வீரர்களிடம் பிடிப்படாமல் தப்பி ஓட முயற்சித்தன. அப்போது, புதுப்பட்டியை சேர்ந்த பார்வையாளர் சுப்பிரமணியன் என்பவர் காளை குத்தி உயிரிழந்தார். இதேபோல், மஞ்சுவிரட்டு போட்டியில் படுகாயம் அடைந்த நபரை மீட்க சென்ற மின்செல் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் நவநீதகிருஷ்ணன் என்பவரின் வயிற்றில் காளை குத்தி உயிரிழந்தார். இந்நிலையில், மாடு முட்டி உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்குவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், பலியான சுப்பிரமணியன் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படுவதாக அறிவித்துள்ளார்.
மஞ்சுவிரட்டில் மாடுமுட்டி உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
Tamil News