No results found

    அனைத்து ரெயில் நிலையங்களிலும் ஒரே மாதிரியான பெயர் பலகைகள் - ரெயில்வே மந்திரி


    நாடு முழுவதும் அனைத்து ரெயில் நிலையங்களிலும் பெயர் பலகைகள் மற்றும் அடையாள சின்னங்களை ஒரே மாதிரியாக வைப்பது தொடர்பான புத்தக கையேட்டை ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: உலகிலேயே அதிகமான ரெயில் நிலையங்களை இந்தியா கொண்டுள்ளது. பெண்கள், முதியோர், குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் என அனைத்து தரப்பினரும் எளிதில் அடையாளம் காணும் வகையில், பெயர் பலகைகளையும், அடையாள சின்னங்களையும் ஒரே மாதிரி இடம்பெற செய்யவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. வண்ணம், எழுத்தின் அளவு, உருவங்கள் என அனைத்தும் ஒரே மாதிரியாக இருக்கும். மாற்றுத்திறனாளி பயணிகளுக்கு வசதியான அடையாள சின்னங்களை வைப்போம். எளிமையான வார்த்தைகள், தெளிவாக தெரியும் நிறம் ஆகியவற்றை பின்பற்றுவோம். மூவர்ணத்தின் பின்னணியில் ரெயில் நிலைய பெயரை குறிப்பிடும் புதிய பலகைகள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன என தெரிவித்தார்.

    Previous Next

    نموذج الاتصال