No results found

    பிரதமர் மோடி பிரான்ஸ் செல்கிறார்: தேசிய தின கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்பு


    இந்தியாவுக்கும், பிரான்சுக்குமான இடையேயான ராணுவ கூட்டின் 25-வது ஆண்டு இது ஆகும். இதைக் கவுரவிக்கிற விதத்தில், ஜூலை மாதம் 14-ந் தேதி 'பேஸ்டில் தினம்' என்ற பெயரில் கொண்டாடப்படுகிற பிரான்ஸ் நாட்டின் தேசிய தின கொண்டாட்டத்தில் பிரதமர் மோடியை சிறப்பு விருந்தினராக அழைத்து பிரான்ஸ் கவுரவப்படுத்துகிறது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி பிரான்ஸ் செல்கிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது பாரீஸ் நகரில் நடக்கிற இந்த விழாவின்போது இடம்பெறுகிற அணிவகுப்பில் பிரான்ஸ் படையினருடன், இந்தியப்படை வீரர்களும் கலந்து கொள்கிறார்கள். பிரதமர் மோடி மேற்கொள்கிற இந்தப் பயணத்தின் வாயிலாக இரு தரப்பு ராணுவ கூட்டு அடுத்த கட்டத்துக்கு செல்லும் என தகவல்கள் கூறுகின்றன. மேலும், இரு தரப்பு ராணுவ, கலாசார, அறிவியல், கல்வி, பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்புக்கான புதிய லட்சிய நோக்கங்களுக்கும் இது துணை நிற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Previous Next

    نموذج الاتصال