No results found

    மகிந்த ராஜபக்சே மீதான வெளிநாட்டு பயண தடை நீக்கம்


    இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த ஆண்டு அரசுக்கு எதிராக மக்கள் தீவிரமாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின்போது வன்முறை வெடித்தது. அப்போதைய பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் ஆதரவளர்கள், போராட்டக்காரர்களை கடுமையாக தாக்கினர். வன்முறையில் 9 பேர் கொல்லப்பட்டனர். 300 பேர் காயமடைந்தனர். இதுதொடர்பான வழக்கை விசாரித்த துறைமுக மாஜிஸ்திரேட் கோர்ட், ராஜபக்சே உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு தடை விதித்து கடந்த ஆண்டு மே மாதம் உத்தரவிட்டது. ராஜபக்சேவின் சகோதரரும் அதிபருமான கோத்தபய ராஜபக்சே பதவி விலகும்படி வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடு முழுவதும் ஊரடங்கு விதிக்கப்பட்ட சில மணி நேரங்களில் மகிந்த தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே வெளிநாடுகளுக்கு செல்ல விதிக்கப்பட்ட தடையை நீதிமன்றம் நீக்கி உள்ளது. அத்துடன் 4 அரசியல் தலைவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பாஸ்போர்ட்டுகளை அவர்களிடம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாக டெய்லி மிரர் நாளிதழில் செய்தி வெளியாகி உள்ளது.

    Previous Next

    نموذج الاتصال