No results found

    சித்தராமையா, சிவகுமார் இருவருக்கும் வாழ்த்துக்கள் - பசுவராஜ் பொம்மை!


    கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. தனிப்பெரும்பான்மையுடன் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க இருக்கிறது. இந்த நிலையில், முதல்வர் பதவிக்கு போட்டியிடும் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் சித்தராமையா மற்றும் டிகே சிவகுமார் ஆகியோருக்கு முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை வாழ்த்து தெரிவித்துள்ளார். தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று மாலை நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் புதிய முதல்வர் யார் என்பது பற்றி விவாதிக்கப்பட இருக்கிறது. எதிர்கட்சி தலைவர் சித்தராமையா மற்றும் கர்நாடக காங்கிரஸ் கமிட்டி தலைவர் டிகே சிவகுமார் முதல்வர் பதவிக்கு போட்டியிடுகின்றனர்.

    "இருவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் அரசாங்கத்தை அமைத்து, அமைச்சரவை கூட்டத்தை நடத்தட்டும். அவர்களது முடிவுகளை அறிவிக்கட்டும். பொருத்திருந்து பார்ப்போம்," என்று பசுவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். மொத்தமுள்ள 224 தொகுதிகளுக்கு மே 10 ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக கட்சி 66 இடங்களையும், ஜனதா தளம் கட்சி 19 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. சட்டமன்ற தேர்தலில் தோல்யுற்றதை அடுத்த பசுவராஜ் பொம்மை நேற்று (மே 13) தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

    Previous Next

    نموذج الاتصال