No results found

    ஜிப்மர் கட்டண சலுகை அரசியலாக்கப்படுகிறது- புதுவை கவர்னர் தமிழிசை ஆதங்கம்


    புதுவை அரசின் சுகாதாரம், செய்தி, கல்வித்துறை இணைந்து 3 நாள் சுகாதார திருவிழாவை காமராஜர் மணிமண்டபத்தில் நடத்துகிறது. முகாமை கவர்னர் தமிழிசை தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:- கொரோனாவுக்கு பின் பல நோய்கள் அதிகரித்துள்ளது. எனவே நம் உடல் நன்றாக உள்ளதா? என பரிசோதித்து தெரிந்து கொள்ள வேண்டும். மருத்துவத்துறையில் நவீன சிகிச்சைகள் வந்து விட்டது. புற்றுநோய் ஆரம்பத்திலேயே வந்தால் சரி செய்து விடலாம். ஜிப்மர் மருத்துவமனை வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு முற்றிலுமாக இலவச சிகிச்சை அளித்து வருகிறது. வறுமைக் கோட்டுக்கு மேல் உள்ளவர்களிடம் குறைந்த கட்டணம் பெறப்படுகிறது. ஜிப்மர் கட்டண சலுகை அரசியலாக்கப்படுகிறது. ஜிப்மருக்கு இணையாக புதுவை அரசு ஆஸ்பத்திரிகள் உலகத்தரம் வாய்ந்ததாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஜிப்மரில் 60 சதவீத தமிழக நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

    Previous Next

    نموذج الاتصال