No results found

    வீடியோ வெளியிட்டு ஜெயிலர் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு


    இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் தற்போது கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

    இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடிக்கிறார். அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்தது. இப்படம் வருகிற ஆகஸ்ட் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படத்தின் வீடியோ ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. ரஜினி மாஸாக காரில் இருந்து இறங்குவது போன்று இடம்பெற்றிருக்கும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது..

    Previous Next

    نموذج الاتصال