தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரும், தயாரிப்பாளரும், நடிகருமான மனோபாலா உடல்நலக்குறைவால் காலமானார். 69 வயதாகும் இவர் கல்லீரல் பிரச்சனை காரணமாக கடந்த சில நாட்களாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த சிகிச்சைக்கு மத்தியில் வீட்டில் ஓய்வெடுத்து வந்த நிலையில் அவர் இன்று உயிரிழந்தார். இவரது திடீர் மறைவு திரையுலகினரை மட்டுமல்லாது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் மனோபாலா மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகை ராதிகா பதிவிட்டிருப்பது, இதயம் நொறுங்கியதாக உணர்கிறேன். இன்று காலையில் தான் அவரிடம் போனில் பேசினே. இருவரும் சிரித்து, சண்டையிட்டு, சாப்பிட்டு பல விஷயங்களை பற்றிய் பேசியுள்ளோம், நாம் அனைவரும் அவரை மிஸ் செய்வோம்.
இயக்குனர் சேரன் பதிவிட்டிருப்பது, தாங்க முடியாத செய்தி... மனதை உலுக்கி எடுக்கிறது.. நான் பெற்ற உங்களின் அன்பு மறக்க முடியாதது.... போய்வாருங்கள் மாமா.... நடிகர் கவுதம் கார்த்திக், இதற்கு பிறகு மனோபாலா சார் நம்முடன் இருக்கமாட்டார் என்ற செய்தி இதயத்தை உடைக்கிறது. அவருடன் பணிபுரிந்தது மிகவும் சந்தோஷம். கண்டிப்பாக உங்களை மிஸ் செய்வேன். அவருடைய குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் என்று தெரிவித்தனர். மேலும் இளையராஜா, பாராதிராஜா வீடியோ பதிவின் மூலம் தங்களது இரங்கலை தெரிவித்தனர். மனோபாலாவின் உடல் நாளை காலை 10.30 மணி அளவில் தகனம் செய்யப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Heartbreaking to hear that Director/Actor #Manobala sir is no longer with us.
— Gautham Karthik (@Gautham_Karthik) May 3, 2023
Was a true pleasure to work with you sir!
You will be surely missed! 💔
Condolences to family, friends and loved ones...#RIPManobala pic.twitter.com/Ou2QBGsYLs