No results found

    அதிகரிக்கும் கொரோனா - மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய மந்திரி நாளை ஆலோசனை


    இந்தியாவில் ஒருநாள் கொரோனா நேற்று 4 ஆயிரத்தை தாண்டிய நிலையில், இன்று 5 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 23,091-ல் இருந்து 25,587ஆகவும் அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் தலைதூக்கியுள்ள நிலையில், அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியைப் பின்பற்றுவது உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், மாநில சுகாதாரத்துறை மந்திரிகளுடன், மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா நாளை காணொளி வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளார். அப்போது, முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அறிவுறுத்தப்படும், புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது குறித்து ஆலோசனை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Previous Next

    نموذج الاتصال