No results found

    பொது சேவை மைய கிராமப்புற தொழில் முனைவோர்கள் (CSC) மூலம் பொது மக்களுக்கு கட்டணமில்லா சட்ட ஆலோசனை வழங்குவது குறித்து கலந்தாய்வு கூட்டம்


    விழுப்புரம் மாவட்டம் ASG  திருமண மஹாலில் , அனைத்து கிராம பொது சேவை மையம் ( சி எஸ் சி) கிராமப்புற சுய தொழில் முனைவோர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கிராமத்தில் பின்தங்கிய, ஏழை-எளிய மக்களுக்கு, கட்டணமில்லாத சட்ட ஆலோசனை டெலி-லா இணையத்தில் பதிவு செய்தவதன் மூலம் வீடியோ கான்பரன்சிங் அல்லது தொலைபேசி மூலம் வழக்கறிஞரின் சட்ட ஆலோசனை நேரடியாக பொதுமக்களுக்கு வழங்குவது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. மின்னனு தகவல் தொழில் நுட்பம் மற்றும் நீதி அமைச்சகத்தால் டெலி-லா இணைய தளத்தின்  வாயிலாக கிராமப்புற மக்களுக்கு  பொது சேவை மையத்தின் வாயிலாக இத்திட்டம் செயல்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து பொது சேவை மையங்களிலும் சட்ட ரீதியான சந்தேகங்களை எந்த ஒரு கட்டணமும் இல்லாமல் மக்கள் தெரிந்து கொள்ளலாம் . இத்திட்டம் மக்களுக்கு சென்றடைய விழிப்புணர்வு கூட்டம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமத்திலும் நடத்த வேண்டும் என்று CSC  சார்பாக வலியுறுத்தபட்டது. இக்கூட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர்  வெங்கட்ரமணன், ஷாருக்கான், வேளாண்மைத்துறை இணை இயக்குனர் செல்வகுமார், மாவட்ட மேலாளர் தினேஷ்பாபு  மற்றும் பொது சேவை மைய கிராமப்புற தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டனர்.

    Previous Next

    نموذج الاتصال