No results found

    அண்ணாமலை அரசியல் நிலைப்பாட்டை தக்க வைக்க தி.மு.க. மீது குற்றச்சாட்டு வைக்கிறார்- கனிமொழி பேட்டி


    சட்டமேதை அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் நிலையம் அருகே உள்ள அவரது சிலைக்கு தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, சண்முகையா எம்.எல்.ஏ., மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவரிடம், பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தி.மு.க.வினரின் சொத்துப்பட்டியலை வெளியிட்டது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது கனிமொழி எம்.பி. கூறும்போது, பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தனது அரசியல் நிலைப்பாட்டை தக்க வைத்துக் கொள்வதற்காக தி.மு.க.வினர் மீது இது போன்ற குற்றச்சாட்டுகளை முன் வைக்கிறார் என்றார்.

    Previous Next

    نموذج الاتصال