No results found

    ரேப்பிடோ ஓட்டுனரின் அத்துமீறலால் பைக்கில் இருந்து குதித்த இளம்பெண்- வைரலாகும் சிசிடிவி காட்சி


    கர்நாடகா மாநிலத்தில் கடந்த 21ம் தேதி அன்று இளம்பெண் ஒருவர் இந்திரா நகரை நோக்கி செல்வதற்காக ரேப்பிடோவை புக் செய்துள்ளார். பின்னர் ரேப்பிடோ பைக்கில் ஏறிய இளம்பெண்ணிடம் இருந்து அதன் ஓட்டுனர் ஓடிபி குறித்து பார்ப்பதற்காக செல்போனை வாங்கியுள்ளார். பின்னர், இளம்பெண்ணை மாற்று பாதையில் அழைத்து சென்று தவறாகவும் நடக்க முயன்றுள்ளார். இதனால் பயந்துபோன இளம்பெண் வேகமாக ஓடும் பைக்கில் இருந்து திடீரென குதித்து தப்பியுள்ளார்.

    இதுதொடர்பாக பெண் அளித்த புகாரை அடுத்து போலீசார் சம்பந்தப்பட்ட தீபக் என்கிற ரேப்பிடோ ஓட்டுனரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், இளம்பெண் பைக்கில் இருந்து குதித்து தப்பிய சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    Previous Next

    نموذج الاتصال