No results found

    11 தமிழக மீனவர்களை விடுதலை செய்தது இலங்கை நீதிமன்றம்


    புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள் கடந்த 22ம் தேதி ஆழ்கடலில் மீன்பிடித்தபோது, அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி அவர்கள் கைது செய்யப்பட்டு, இலங்கை சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், மீனவர்கள் தொடர்பான வழக்கு இன்று இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கைது செய்யப்பட்ட 12 பேரில் 11 பேரை நிபந்தனைகளுடன் விடுதலை செய்தது நீதிமன்றம் உத்தரவிட்டது. ஒரு மீனவருக்கு மட்டும் 14 மாதம் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. மீனவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட படகு அரசுடைமையாக்கப்பட்டது.

    Previous Next

    نموذج الاتصال