No results found

    சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல 3-ந்தேதி முதல் 4 நாட்கள் அனுமதி


    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர, சந்தன மகாலிங்கம் கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் வழிபாடு நடத்த 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. வருகிற 3-ந் தேதி பங்குனி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமி (5-ந் தேதி) வழிபாட்டை முன்னிட்டு பக்தர்கள் சதுரகிரிக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற 3-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் 6-ந் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் சதுரகிரி மலை யேறி சென்று சாமி தரிசனம் செய்யலாம். 10 வயது உட்பட்டவர்களும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களும் மலையேற அனுமதி கிடையாது. மலை ஏறுவதற்கு காலை 7 மணி முதல் 2 மணி வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களை கொண்டு செல்ல அனுமதி இல்லை. மலைப் பாதைகளில் உள்ள நீரோடையில் குளிக்க கூடாது. இரவில் மலைக் கோவிலில் தங்க அனுமதி இல்லை என்பது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை வனத்துறை அறிவித்துள்ளது. மேற்கண்ட அனுமதி வழங்கப்பட்ட நாட்களில் மலைப்பகுதிகளில் மழை பெய்தாலோ அல்லது நீரோடைகளில் நீர்வரத்து அதிகம் இருந்தாலோ மலையேற தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    Previous Next

    نموذج الاتصال