No results found

    சைவமும்-வைணவமும் இணைந்த சித்திரை திருவிழா


    மதுரையில் சித்திரை திருவிழா சைவமும், வைணவமும் இணைந்த திருவிழா ஆகும். சைவம், வைணவம் என இரு சமயமும் தொடர்புடைய மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணமும், அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவும் விளங்குகின்றன. சமயங்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்கத்துடனே மன்னர் திருமலைநாயக்கர் காலத்தில் இரு விழாக்களும் இணைக்கப்பட்டு ஒரே விழாவாக நடந்தது.. இதனால் வைகை ஆற்றின் வடகரையில் அமைந்த ஊரான தேனூர் ஆற்றில் கள்ளழகர் இறங்கும் விழாவாக நீண்டகாலமாகவே நடைபெற்று வந்தது. பின்னர் அதனை மதுரை வைகை ஆற்றில் அழகர் இறங்கும்படி விழா மாற்றி அமைக்கப்பட்டது. அதன்படி கள்ளழகர், மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்திற்கு வருவதும், அப்போது திருக்கல்யாணம் முடிந்து விட்டதால் வைகை ஆற்றில் இறங்கி விட்டு அப்படியே கோவிலுக்கு திரும்பி சென்று விடுவதும் போன்று திருவிழா அமைந்துள்ளது. இப்படி சித்திரையில் முத்திரை பதிக்கும் சித்திரை திருவிழாவை அனைத்து தரப்பினரும் இணைந்து கொண்டாடுவது சிறப்பாகும்.

    Previous Next

    نموذج الاتصال