No results found

    2022-23-ம் நிதியாண்டில் ரூ.15,920 கோடி ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி - ராஜ்நாத் சிங் பெருமிதம்


    உலக அளவில் ஆயுதங்கள் மற்றும் ராணுவ தளவாடங்களை இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னணியில் உள்ளது. உள்நாட்டிலும் இந்திய முப்படைகளுக்குத் தேவையான ஆயுதங்கள் தயாரிக்கப்படுகின்றன. அதேநேரம் இந்தியா வெளிநாடுகளுக்கும் ராணுவ தளவாடங்களை ஏற்றுமதி செய்து வருகிறது. இந்நிலையில், கடந்த 2022-23-ம் நிதியாண்டில் ரூ.15,920 கோடி அளவுக்கு ஏற்றுமதி நடந்துள்ளது என ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், இந்தியாவின் ராணுவ தளவாட ஏற்றுமதி முன்னெப்போதும் இல்லாத வகையில் 2022-23-ம் நிதியாண்டில் ரூ.15,920 கோடி அளவுக்கு நடந்துள்ளது. இது நாட்டிற்கு குறிப்பிடத்தக்க சாதனையாகும்.

    பிரதமர் மோடியின் உத்வேகமூட்டும் தலைமையின் கீழ், நமது ராணுவ தளவாட ஏற்றுமதி தொடர்ந்து அதிவேகமாக வளரும் என நம்பிக்கையும் தெரிவித்து இருந்தார். இந்தியா கடந்த 2021-22-ம் நிதியாண்டில் ரூ.12,814 கோடி மதிப்பிலான ராணுவ தளவாடங்களை ஏற்றுமதி செய்திருந்தது. வரும் 2024-25-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் உள்நாட்டு ராணுவ தளவாட உற்பத்தி ரூ.1.75 லட்சம் கோடி அளவுக்கும், வெளிநாட்டு ஏற்றுமதி ரூ.35 ஆயிரம் கோடி அளவுக்கும் எட்டுவதை இலக்காக அரசு நிர்ணயித்துள்ளது என பதிவிட்டுள்ளார். முந்தைய 2020-21-ம் ஆண்டில் ரூ.8,434 கோடி, 2019-20-ம் நிதியாண்டில் ரூ.9,115 கோடி அளவுக்கும் ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி நடந்துள்ளது.

    Previous Next

    نموذج الاتصال