No results found

    உலக உடன்பிறப்புகள் தினத்தை முன்னிட்டு ராகுல் காந்தியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட பிரியங்கா


    உலக உடன்பிறப்புகள் தினம் ஆண்டு தோறும் ஏப்ரல் 10-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் அனைவரும் தங்களது உடன் பிறந்த அல்லது உடன் பிறவாத சகோதர, சகோதரிகளுக்கு வாழ்த்துக்களை பரிமாறி கொள்வது வழக்கம். அதன்படி நேற்று உலக உடன் பிறப்புகள் தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தனது சகோதரர் ராகுல் காந்தியுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்தார். அதில் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகிய இருவரும் பனிமூடிய சாலையில் கனமான குளிர்கால உடை அணிந்து நடப்பதை காண முடிகிறது. அந்த படத்துடன் பிரியங்கா ஒரு குறிப்பையும் பகிர்ந்துள்ளார். அதில், அநியாயத்தை கண்ணியத்துடன் எதிர்கொள்ளும், அனைத்து வகையான அசுத்தங்களும் தன் மீது வீசப்பட்டாலும் நன்மைக்காகவும், கருணைக்காகவும் நிற்கும் தைரியம் கொண்ட எனது ஒரே உடன் பிறந்த சகோதரா... உன்னை நினைத்து நான் பெருமைப்படுகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.அவரது இந்த பதிவு மற்றும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.சமூக வலைதளங்களில் "வைரல்" ஆன ருசிகரங்கள்

    Previous Next

    نموذج الاتصال