No results found

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பை ஏற்று குடியரசு தலைவர் தமிழகம் வருகை


    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அதிகாலை டெல்லி சென்றார். அங்கு, குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நேரில் சந்தித்து பேசினார். அப்போது, குடியரசு தலைவருக்கு கருணாநிதி வாழ்க்கை வரலாறு தொடர்பான புத்தகத்தை பரிசளித்தார். பின்னர், தமிழகத்தில் கிண்டியில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை திறந்து வைக்க குடியரசு தலைவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பை ஏற்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தமிழகம் வருவதாக உறுதியளித்துள்ளார். அதன்படி, கிண்டியின் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு திறந்து வைக்கிறார். இதற்காக வரும் ஜூன் 5ம் தேதி திரௌபதி முர்மு தமிழகம் வருகிறார்.

    Previous Next

    نموذج الاتصال