No results found

    பா.ஜ.க. அலுவலகத்தில் குவிக்கப்பட்ட போலீசார்


    தி.மு.க. ஊழல் பட்டியலை அண்ணாமலை வெளியிட்டதையொட்டி அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க கமலாலயம் அமைந்துள்ள வைத்தியநாதன் தெருவில் இருபக்கமும் தடுப்பு வேலி அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அலுவலகத்துக்கு வந்த அனைவரையும் பலத்த சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதித்தனர். அனைவரது அடையாள அட்டைகளும் செல்போனில் புகைப்படமாக எடுக்கப்பட்டன. ஊழல் பட்டியல் வெளியிட்டு முடிந்ததும் கட்சி நிர்வாகிகள் சால்வை அணிவித்து அவருக்கு பாராட்டு தெரிவித்தனர். மாநில நிர்வாகிகள் கரு.நாகராஜன், கேசவ வினாயகம், கராத்தே தியாகராஜன், நடிகை நமீதா. திருப்பதி நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Previous Next

    نموذج الاتصال