No results found

    தெப்பக்காடு முகாமில் யானைகளை பார்வையிட்டார் பிரதமர் மோடி


    கர்நாடகா மாநிலம் பந்திப்பூரில் இருந்து சாலை மார்க்கமாக வந்த பிரதமர் மோடி, முதுமலை வந்தடைந்தார். இதையடுத்து தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு வந்த பிரதமர், வளர்ப்பு யானைகளுக்கு கரும்பு அளித்து மகிழ்ந்தார். முகாமில் பராமரிக்கப்படும் யானைகளை பார்வையிட்டார். ஆஸ்கார் விருது பெற்ற ஆவணப்படத்தில் நடித்த பொம்மன்-பெள்ளியை பிரதமர் மோடி சந்தித்தார். ஆவண குறும்படத்தில் நடித்த யானையையும் அவர் பார்வையிட்டார். டி23 புலியை உயிருடன் பிடிக்க உதவிய பழங்குடியின வனத்துறை ஊழியர்களை பிரதமர் சந்திக்கிறார். பிரதமர் வருகையையொட்டி முதுமலை, கூடலூர், மசினகுடி உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. ஆஸ்கார் விருது பெற்ற ஆவணப்படத்தில் நடித்த பொம்மன்-பெள்ளியை சந்தித்து பாராட்டு தெரிவிக்கிறார்.

    Previous Next

    نموذج الاتصال