No results found

    கவுகாத்தி எய்ம்ஸ் மருத்துவமனையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி


    பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு திட்டங்களைத் தொடங்கிவைக்க இன்று அசாம் மாநிலத்திற்குச் சென்றார். இந்நிலையில், கவுகாத்தியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம் (எய்ம்ஸ்) மருத்துவமனையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். கவுகாத்தி எய்ம்ஸ் மருத்துவமனை கடந்த 2017-ம் ஆண்டு பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டு ரூ.1,120 கோடியில் கட்டி முடிக்கப்பட்டது. இந்த மருத்துவமனையானது அசாமில் உள்ள மக்களுக்கு மட்டுமின்றி, மற்ற வடகிழக்கு மாநிலங்களுக்கும் மருத்துவ சேவையை வழங்கும். இதனை தொடர்ந்து நல்பாரி, கோக்ரஜார் மற்றும் நாகோன் மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரியையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார். 3 மருத்துவக் கல்லூரிகளும் சுமார் ரூ.615 கோடி, ரூ.600 கோடி மற்றும் ரூ.535 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.

    Previous Next

    نموذج الاتصال